உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


பணிப்புலத்தை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கனடா ஸ்காபறோ நகரில் வாழ்ந்து வந்தவருமகிய செல்லையா பாலசிங்க்கம் அவர்கள் 17.11.2012 அன்று இரவு சிவபதம் எய்தினார். அன்னார் வள்ளியம்மையின் ஆருயிர் கணவரும்; சிவபதமெய்திய செல்லையா தெய்வானை தம்பதியினரின் அன்பு மகனும்; சிவபதமெய்திய முத்தையா தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்; பாலதேவராசா, அமரர் பாலதிலகராசா, சிவாபலன், பாலகிஷ்ணன், யமுனராணி, யசிந்தராணி ஆகியோரின் அன்பு தந்தையும்;  சிவாகுமர், சாபேஸ் ஆகியோரின்  அன்பு மாமனாருமாவார்.

அன்னாரின் பூதவுடல் அன்னாரின் பூதவுடல், 20.11.2012 செவ்வாய்க்கிழமை மாலை 5 .00 முதல் 9 .00 வரை “ஓக்டன் மலர்சாலையில்” (Midland and Sheppard சந்திப்புக்கு அருகாமையில் அமைந்துள்ள ) (OGDEN ) Funeral home” (4164 Sheppard Ave -East) பார்வைக்கு வைக்கப்பட்டு; 

மறுநாள் புதன்கிழமை 21.11.2012 காலை அதே “ஓக்டன் ( Ogden ) Funeral home” ல் காலை 9:00 மணிமுதல் 11:00 மணிவரை இறுதிக் கிரியைகள் இடம்பெற்று; இல.375 Mount Pleasant Road ல் அமைந்துள்ள Mount Pleasant Cemetery – மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பெற்று தகனம் செய்யப்பெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டப்படுகின்றனர்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக.

“ஓம் சாந்தி” “ஓம் சாந்தி” “ஓம் சாந்தி”
துயர்பகியர: பாலதேவராசா – தேவர் (கனடா)             001-647-669-9590       சிவபாலன் – சிவா (கனடா):             001-416-826-1064       பாலகிருஷ்ணன் – பாலா (கனடா):             001-416-999-6461      

12 Responses to “மரண அறிவித்தல்!”

 • Thavam .Ramar:

  ஐயாவின் பிரிவினால் வேதனைபடும் அம்மா ,பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்கு அனைவர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும்,அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திகும் Thavam Shama குடும்பம்

 • Ragavan & Paskaran Family, Germany:

  மதிப்புக்குரிய அமரர் பாலசிங்கம் ஐயாவின் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுவதோடு அவரின் மறைவால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் …

 • ஜேர்மனி பண்மக்கள் ஒன்றியம்:

  ஜேர்மனி பண்மக்கள் ஒன்றியம் அமரத்துவம் அடைந்த செல்லையா பாலசிங்க்கம் அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களுடன் அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகின்றோம்

 • தீபம் சஞ்சிகை:

  இல்லறமாம் நல்லறத்தில் உழைத்துண்டு வாழ்ந்து -இன்

  சொல்லறத்தால் சொந்தங்களோடு குழைந்து உறவாடி நல்லோனாய்

  வாழ்ந்து திடீரென நல்லுலகம் விரைந்துவிட்ட

  திரு. செல்லையா பாலசிங்கம் அவர்கள் ஆத்மா சாந்தியடைய

  இறைவனை வேண்டுவதுடன் அவரது உறவுகளுக்கு

  ஆழ்ந்த அனுதாபத்தையும் கவலையையும் எனது குடும்பம் சார்பாக

  தீபம் தெரிவித்துக் கொள்கிறது.
  ———-செ.மனுவேந்தன்

 • gobal:

  பாலசிங்கம் ஐயாவின் மறைவினால் துயருறும் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும்,அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

 • Siva Subramaniam:

  பாசமிகு பண்புள்ள பாலசிங்கம் ஐயாவின்
  ஆத்மா சாந்தியடைய எல்லாம்வ வல்லஇறைவனை வேண்டுகின்றோம்.

  சுப்ரமணியம் குடும்பம்

 • பண் மக்கள் ஒன்றியம் சுவிஸ்:

  திரு செல்லையா பாலசிங்கம் அவர்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம் .
  அன்னாரின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .

 • பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே.:

  பணிப்புலத்தை பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபறோ நகரில் வாழ்ந்து வந்தவருமகிய செல்லையா பாலசிங்க்கம் அவர்கள் 17.11.2012 அன்று சிவபதம் எய்தினார் செய்தி
  கேட்டு நாமும் பேரதிர்ச்சி அடைந்தோம்.அன்னாரின்பிரிவினால்
  துயருறும்மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்
  நண்பர்கள் அனைவருக்கும் பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம்

  நோர்வே ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது . அன்னாரின் ஆத்மா

  சாந்தியடையஇறைவனை பிரார்த்திக்கின்றோம்.

  பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே.

 • பலெர்மோ :த. சங்கர்:

  திருதிரு .செல்லையா பாலசிங்க்கம் அவர்களின் பிரிவின் துயருற்றிருக்கும் சோகத்தின் நினைவில் உள்ள மனைவி பிள்ளைகள் சகோதரகள் சகோதரி மற்றும் அனைவருக்கும் இத்தாலி பண் மக்களின் சார்பாகவும் அவரின் ஆத்மா சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்

 • selvarajah:

  அன்புக்குரிய பாலுஐயாவின் மரணச்செய்தி அறிந்து ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி, மக்கள், உற்றார் உறவினர் அனைவருக்கும் எமது குடும்பம் சார்பாக அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வ வல்ல அம்பிகையை வேண்டுகின்றோம்.
  உங்கள் நண்பர் கணேசரின் மகன் இராசன் குடம்பம்.

 • என் அன்புக்குரிய பாலுமாமா அவர்களின் மரணச்செய்தி
  கேட்டு ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி, மக்கள், உற்றார் உறவினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை எனது குடும்பம் சார்பாக தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

 • இறுதிக்காலம் வரையும் என்னை அன்புடன் தம்பி என்று அழைக்கும் அருமை அண்ணர் பாலு அவர்களின் மரணச் செய்தியை அறிந்து அதிர்ச்சியும் மாபெரும் கவலையும் அடைந்துள்ளேன். எனது அண்ணரின் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் கவலையையும் எனது குடும்பம் சார்பாக தெரிவித்துக் கொள்வதுடன்
  அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்