உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார் காஜல் அகர்வால். பெரிய ஹீரோக்களுடனும், ஜோடியாக நடிக்கிறார். ஐதராபாத்தில் காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-

நான் 2004-ல் சினிமாவுக்கு வந்தேன். தெலுங்கில் ‘மகதீரா’ படம் எனக்கு பெரிய அந்தஸ்து கொடுத்தது. இப்போது நிறைய தெலுங்கு படங்கள் கைவசம் உள்ளது. தமிழ் படங்களிலும் பிஸியாக நடிக்கிறேன்.

‘மாற்றான்’ படத்தில் நல்ல கேரக்டர் அமைந்தது. ‘துப்பாக்கி’ படத்திலும் அழுத்தமான வேடம். சவாலான கேரக்டர்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். தமிழில் மணிரத்னம் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறது. புடவை கட்டுவது எனக்கு பிடிக்கும். மழையில் நனைந்தபடி ஐஸ்கிரீம் சாப்பிடவும் விரும்புவேன்.

எனக்கு பிடித்த இடம் கரீபியன் தீவு. ஓய்வில் பாடல் கேட்பது, புத்தகம் படிப்பது எனக்குள்ள பழக்கங்கள். ‘டர்டி பிக்சர்’ படத்தில் வித்யாபாலன் நடித்த மாதிரி கவர்ச்சியாக ஒருபோதும் நடிக்க மாட்டேன். அதேநேரம் வித்யாபாலனை எனக்கு பிடிக்கும். சமந்தா, தமன்னா இருவரும் எனக்கு நெருங்கிய தோழிகளாக உள்ளனர்.

சினிமாவில் உயர்ந்த இடத்துக்கு வருவேன் என்று நான் நினைக்கவில்லை. கஷ்டப்பட்டு உழைத்தேன், இந்த இடத்துக்கு வந்துள்ளேன். இந்தியை விட தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பது எனக்கு எளிதாக இருக்கிறது.

படப்பிடிப்புகளில் திட்டமிட்டப்படி பங்கேற்காமல் தாமதம் செய்வதாக என்னைப்பற்றி வதந்திகள் பரவி உள்ளன. அதில் துளியும் உண்மை இல்லை. நான் நடித்த தமிழ் படங்கள் திரைப்பட தொழிலாளர்கள் போராட்டாத்தால் தாமதம் ஆயின. நான் அதற்கு காரணம் இல்லை.

யாரையும் நான் காதலிக்கவில்லை. திருமணம் பற்றியும் சிந்திக்கவில்லை. காதல், திருமணத்துக்கெல்லாம் நேரம் இல்லை. மூச்சுவிடக்கூட நேரம் இல்லாமல் பிசியாக நடிக்துக் கொண்டு இருக்கிறேன். நடிகைகள் யாரையும் போட்டியாகவும் கருதவில்லை.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்