உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஆடைப் பொதிகளுக்குள் மறைத்து 15 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சாவைக் கடத்தி வந்த மாத்தளை பிரதேச நபரொருவரை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

23 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த கஞ்சா போதைப்பொருளானது, பெண்களின் இரவு ஆடைப் பொதிகளுக்குள் மறைத்தே சென்னையிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஐகதான சந்தேகநபர் இந்தியாவுக்கு அடிக்கடி சென்று வருபவர் என்றும் இவர் ஆடை வியாபாரத்தில் ஈடுபடுபவர் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்