உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த ‘துப்பாக்கி’ படம் தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் எதிரில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்தார்.

இதையடுத்து ‘துப்பாக்கி’ படத்தை இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு திரையிட்டு காட்டினர். அவர்கள் ஆட்சேபனை தெரிவித்த 5 காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக இந்திய தேசிய லீக் தலைவர் ஜவஹர் அலி கூறியுள்ளார்.

மும்பை நகரில் குண்டு வைக்கும் 12 பேரை முஸ்லிம்கள் என்று அவர்களது பெயர்களை விஜய் பட்டியலிடுவது போன்ற காட்சியும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்று பேசுவது போன்ற வசனமும் கதாநாயகனின் தங்கையை தீவிரவாதிகள் கடத்தி சென்று கொலை செய்ய முயற்சிப்பதற்கு முன்பாக ‘குரான்’ ஒதுவது போன்ற காட்சியும் படத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்திய தேசிய முஸ்லிம் லீக் நன்றி தெரிவித்துக் கொள்கிறது என்றும் அறிக்கையில் ஜவஹர் அலி குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்