தமிழில் எழுத
பிரிவுகள்


ஆந்திராவில் 4 வயது சிறுவனை சிறுநீர் குடிக்க வைத்த ஆசிரியர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அனன்பர்த்தியிலுள்ள சத்யபாமா பள்ளியில் பயிலும் 4 வயது சிறுவன் இயற்கை உபாதையை கழிப்பதற்காக கழிப்பறை செல்ல முயன்றுள்ளான்.

அதற்குள் சிறுநீர் வந்து விடவே அங்கிருந்த பிளாஸ்டிக் கப்பில் அதை பிடித்துள்ளான்.

இதை கவனித்த ஆசிரியை கவுரி, கப்பில் இருந்த சிறுநீரை அந்த சிறுவனுக்கு கொடுத்து குடிக்கச் செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுவனின் பெற்றோர் அனன்பர்த்தி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

வழக்குப் பதிவு செய்த பொலிசார் கிழக்கு கோதாவரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து புகாரின் அடிப்படியில் கிழக்கு கோதாவரி மாவட்ட கல்வி அதிகாரி, அனன்பர்த்தி கார்பரேட் பள்ளியில் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

மேலும், குறிப்பிட்ட ஆசிரியர் குறித்த விசாரணை அறிக்கை அளிக்கவும் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து ஆசிரியையிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்