உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


பிரபல த‌மி‌ழ் நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் 50 பவுன் தங்க நகைகளை திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிக‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌து‌‌ட‌ன் ‘படைய‌ப்பா’ எ‌ன்ற பட‌த்‌தி‌ல் ‌வி‌ல்‌லியாக நடி‌த்து ‌பிரபலமானவ‌ர் நடிகை ர‌ம்யா‌கிரு‌ஷ்ண‌ன். சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கம் ஆலிவ் பீச் பகுதியில் தா‌ய்- த‌‌ந்தையுட‌ன் வ‌சி‌த்து வரு‌‌கிறா‌ர் ர‌ம்யா ‌கிரு‌‌ஷ்ண‌ன்.

இவரது ‌வீட்டில் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ஜோதி (21) என்ற பெண் வேலை பார்த்து வ‌ந்தா‌ர். கடந்த 18ஆ‌ம் தேதி வேலைக்கார பெண் ஜோதி, சொந்த ஊருக்கு போக வேண்டும் என கூ‌றியு‌ள்ளா‌ர்.

அப்போது வீட்டில் இருந்த நடிகை ரம்யா கிருஷ்ணனின் தாய் வித்யா, வெளியே போய்விட்டு வருகிறோம் என கூறிவிட்டு சென்றார்.
பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, வேலைக்கார பெண் ஜோதி, வீட்டில் இல்லை.

பீரோவில் இருந்த தங்கம், வைர நகைகள் சுமார் 50 பவுன் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது கு‌றி‌த்து நீலாங்கரை போலீசில் ரம்யா கிருஷ்ணனின் தாய் வித்யா புகார் செய்தார்.

இதையடுத்து நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த வேலைக்காரி ஜோதியை நேற்று கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகை ரம்யாகிருஷ்ணன் வீட்டில் சிறுக சிறுக நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்