உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் மற்றும் வலம்புரி நாளேடுகளிடம் தலா 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மான நட்டவழக்கு யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

கடந்த ஜுலை 11ம் நாள் இந்த இரு நாளேடுகளும் வெளியிட்ட செய்தி தமக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்கு இழப்பிடாக தலா 100 மல்லியன் ரூபாவை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி கோரியுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் சட்டப்பிரிவு பணிப்பாளர் பிரிகேடியர் ரஞ்சித் ராஜபத்திரன, சிறிலங்கா இராணுவம் சட்டத்துக்கு மேலாகவும் இல்லை, அதேவேளை கீழாகவும் இல்லை. இராணுவத்தின் நற்பெயரைப் பாதுகாக்க நாம் போராடுவாம்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்