தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


கமல் இயக்கி நடிக்கும் ‘விஸ்வரூபம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா வருகிற 2-ந் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

ஏற்கனவே கமல் பிறந்த நாளில் மூன்று முக்கிய நகரங்களில் பாடலை வெளியிட திட்டமிட்டனர். கமல், விமானத்தில் சென்று இவ்விழாக்களில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக ரத்து செய்ததையொட்டி வருகிற டிசம்பர் 2-ந் தேதி நடத்த முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தில் 5 பாடல்கள் உள்ளன. சங்கர் எசன்லாய் இசை அமைத்துள்ளார். கமல் ஜோடியாக பூஜாகுமார், ஆண்ட்ரியா நடித்துள்ளனர். சமீபத்தில் ரிலீசான விஜய்யின் ‘துப்பாக்கி‘ படம் போலவே ‘விஸ்வரூபம்’ படமும் தீவிரவாதத்தை கருவாக வைத்து தயாராகி உள்ளது.

பெரும்பகுதி வெளி நாடுகளில் படமாக்கப்பட்டு உள்ளது. “ஆரோ 3டி’ ஒலி தொழில்நுட்பத்தில் படத்தை எடுத்துள்ளனர். அடுத்த மாதம் இறுதியில் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்