உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கண்டி மாவட்ட அரசாங்க அதிபரின் வீட்டில் சுமார் நான்கு இலட்சத்து 43 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்டி புஷ்பதான மாவத்தையில் அமைந்துள்ள அரசாங்க அதிபரின் வீட்டில் நேற்றிரவு இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக கண்டி குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருட்டுச் சம்பவம் தொடர்பாக அரசாங்க அதிபரின் மனைவியான ஆசிரியை அமிதா செனவிரத்ன, கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.

தங்கச் சங்கிலி, வளையல், மோதிரம் உட்பட பல நகைகள் திருட்டுப் போயுள்ளதாக முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதுடன், விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்