உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வுக்கு முன்பதாக இந்த வருட தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவே கூட்டமைப்புடன் அமெரிக்கா ஆராயவுள்ளது.

2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள அடுத்த அமர்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் நவனீதம்பிள்ளை இலங்கை பற்றி ஓர் அறிக்கை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அடுத்த வருட முற்பகுதியில் அமெரிக்காவிற்கு விஜயத்தை மேற்கொள்ளும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அமெரிக்கா அதிகாரிகளுடனான எமது பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாகவே இது அமையும் என அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழுவொன்று அமெரிக்க இராஜாங்க அமைச்சின் அழைப்பின் பேரில் கடந்த வருடம் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்