உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை மகிந்த அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என யாழிற்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா சபையின் அதிகாரிகளிடம் யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐ.நா சபையின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய அரசியல் விவகாரச் செயலாளர் ஹிட்டோக்கி டென் மற்றும் யங்குவான்லீ ஆகியோர் காலை யாழ். ஆயருடன் சந்திப்பொன்றினை மேற்கொண்டனர். அதன் போதே அவர் இந்தக் கோரிக்கையினை அவரிடம் முன்வைத்தார்.

இச் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த ஆயர்,
யுத்தம் நிறைவடைந்து மூன்று வருடங்கள் முழுமையாக கடந்த போதும் தமிழ் மக்கள் போர் ஏற்படுத்திய துன்பங்களிலிருந்து இன்னும் மீளவில்லை,

யுத்தம் நிறைவடைந்த பின்னாவது வட பகுதியிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படும் என நம்பியிருந்த மக்களுக்கு வெறும் ஏமாற்றமே ஏற்பட்டது இதனால வடபகுதியில் அச்சமற்ற சூழ்நிலை நிலவக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக கூறமுடியாது.

குறிப்பாக யுத்தத்தின் போது 80 வீதமான வீடுகள் முற்றாக அழிக்கப்படன மற்றும் மீள்குடியேற்றப்பட்ட மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

அவர்களுடைய வாழ்வாதாரம் மற்றும் மீன்பிடி உள்ளிட்ட விடயங்களில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர் என தாம் அவர்களிடம் எடுத்துக் கூறியதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து வடபகுதியில் தேர்தல் ஒன்று இடம்பெறும் என மக்கள் எதிர்பார்த்த போதும் அதனை அரசாங்கம் நடத்தாமல் அபிவிருத்தி என்ற பெயரில் வீதிகள் போடுவதும் கட்டடங்கள் கட்டுவதிலும் ஆர்வம் காட்டிவருகின்றதே தவிர அரசியல் தீர்வை தமிழருக்கு பெற்றுக் கொடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்