உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அமெரிக்க விமானங்களில் தீவிரவாதிகள் ஏறி பயணிகள் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதை தடுப்பதற்காக கடந்த 2007-ம் ஆண்டு முதல் முழு உடல் பரிசோதனை செய்ய அந்த நாட்டு அரசு ஏற்பாடு செய்து உள்ளது. அமெரிக்காவின் 65 விமான நிலையங்களில் 315 நிர்வாண பரிசோதனைக்கான ஸ்கேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் 450 ஸ்கேனர்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
முழு நிர்வாண பரிசோதனைக்கு அமெரிக்க மக்கள் ஆதரவாக இருக்கிறார்களா என்பதை கண்டறிவதற்காக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில் 10 அமெரிக்கர்களில் 8 பேர் இந்த பரிசோதனைக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.
இதற்கு மனித உரிமைக்குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இது தனிநபரின் அந்தரங்கத்துக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் சட்டவிரோத செயல் என்று அந்த குழுக்கள் குறை கூறி வருகின்றன. கிட்டத்தட்ட 15 சதவீதம் அமெரிக்கர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்