உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் இரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் விக்கிலீக்ஸ் இணையத்தள நிறுவனர் அசாஞ்ச்.
இதனையடுத்து லண்டனிலுள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்தார் அசாஞ்ச்.

பல மாதமாக தூதரக கட்டிடத்திற்குள்ளேயே முடங்கி கிடப்பதால் அவரது உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்படுகிறது.

மருத்துவரை வரவழைத்து சிகிச்சை கொடுக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவருக்கான அனைத்து சிகிச்சை செலவையும் ஈக்வடார் அரசே ஏற்றுக் கொண்டிருக்கிறது.

தற்போது அசாஞ்சே நுரையீரல் கோளாறால் மிகவும் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி இங்கிலாந்து நாட்டிற்கான ஈக்வடார் தூதர் அனா ஆல்பின் கூறுகையில், அசாஞ்சே கடுமையான நுரையீரல் கோளாறினால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்.

இது எந்த நேரத்திலும் மேலும் மோசமான நிலையை அடையலாம். முழு மருத்துவ செலவுகளையும் ஈக்வடார் அரசாங்கமே ஏற்றுள்ளது.

மருத்துவர்கள் தினமும் சென்று அவருடைய உடல்நிலையை சோதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்