உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


பாகிஸ்தானில், கராச்சி பகுதியில் உள்ள, ராமர் கோவில் இடிக்கப்பட்டதால், அப்பகுதியில் உள்ள இந்துக்கள், போராட்டம் நடத்தினர்.

இந்திய – பாகி., பிரிவினைக்கு பிறகு, பாகி.,னில் உள்ள, பல கோவில்கள் இடிக்கப்பட்டன. இன்னும் பல கோவில்கள் பராமரிப்பின்றி உள்ளன.கராச்சியின், சோல்ஜர் பஜார் பகுதியில் ராம பிரான் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றிலும் இந்துக்கள் வசிக்கின்றனர். நேற்று காலை, கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த சிலர், ராமர் கோவிலையும், அதை சுற்றியுள்ள இந்துக்களின் வீடுகளையும், இடித்து தரைமட்டமாக்கினர்.

கோவிலில் சிலைகள் மீது, அணிவிக்கப்பட்டிருந்த தங்க கிரீடம் மற்றும் நகைகளை, கட்டுமான நிறுவனத்தினர் எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.தடுக்க முயன்ற, இந்துக்களை சுட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட இந்துக்கள், கராச்சி “பிரஸ் கிளப்’ அருகே, நேற்று போராட்டம் நடத்தினர்.இதுகுறித்து அப்பகுதி நிர்வாகம், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என, பாதிக்கப்பட்ட இந்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்