Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவ பீட மாணவர்கள் 5 பேரும், விஞ்ஞான பீட மாணவர்கள் 2 பேருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.

எனினும், முகாமைத்துவ பீடம் மற்றும் கலைப்பீடம் ஆகிய மாணவர்கள் விடுதலை தொடர்பாக இன்றைய தினம் துணைவேந்தருக்கும் பயங்கரவாத குற்றத்தடுப்பு அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்தை ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேற்று வவுனியாவுக்கு விஜயம் செய்த யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி கலாநிதி எஸ்.பாலகுமார் மற்றும் முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீட பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி ஆகியோர் குற்றத்தடுப்புப் பிரிவுப் பணிப்பாளருடன் மேற்கொண்ட விசேட சந்திப்பின் போது, கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என உறுதியளிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்