உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அரசியல் தீர்விற்காக முன்மொழியப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பை இணைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒன்பது கட்சிகள் தீர்மானித்துள்ளன.

அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை பாதுகாப்பதற்காக இந்த ஒன்பது கட்சிகளும் ஒரு முன்னணியாக செயற்படவுள்ளன.

சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர தலைமையிலான கம்னியூஷ்ட் கட்சி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தலைமையிலான ஈ.பி.டி.பி, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், அமைச்சர் றிசாட் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரன தலைமையிலான லங்கா சமஷமாஜ கட்சி மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகள் இந்த குழுவில் உள்ளடங்குகின்றன.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் இந்த குழுவின் கூட்டம் நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் கடந்த வாரத்தின் இரண்டு நாட்கள் இடம்பெற்றன.

13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு எதிராக போராடுவதற்கு குறைந்தது 30 நாடளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவை பெறுவதற்கு இந்த கட்சிகள் தீமானித்துமுள்ளன என இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.

இந்த கட்சிகள் அனைத்தும் இணைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் அனுப்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த கட்சிகளின் உறுப்பினர்களுக்கு மேலதிகமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களான அமைச்சர் டிலான் பெரேரா, ரெஜினோல் குரே மற்றும் அதாவுட செனவிரத்ன ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்