உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அழ.பகீரதனின் இப்படியும் கவிதை நூல் வெளியீடு புத்தூர் மேற்கு கலைமதி மக்கள் மண்டபத்தில் நேற்று மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் நூலினை தாயகம் ஆசிரியர் திரு க. தணிகாசலம் வெளியிட முதல் பிரதியினை திரு கதிர்காமநாதன்(செல்வம்) அவர்கள் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் கிராம மக்கள் அனைவரும் சிறப்புப்பிரதி பெற்று சிறப்பித்தனர். மேலும் நிகழ்வில் சட்டத்தரணி சோ.தேவராஜா அவர்கள் நயப்புரை ஆற்றினார். சிறுவர் சிறுமியர் கவிகளை உரைத்தனர். புதியபூமி ஆசிரியர் திரு சி.கா. செந்திவேல் கருத்துரை ஆற்றினார்

http://people.panipulam.net/#252

4 Responses to “அழ.பகீரதனின் இப்படியும் கவிதை நூல் வெளியீடு”

 • வாழ்த்துக்கள்!!! பாராட்டுகள்
  இணையங்களில் உங்களின் இப்படியும் கவிதைநூலின்
  வெளியீட்டை பிரசுரிக்க மாட்டீர்களா??நாங்கள் எல்லோரும்
  வாசிக்க ஆவலாக இருக்கிறோம்

 • Venthan:

  வணக்கம்
  பகீரதன் தங்கள் கவிதை நூலை கனடாவில் எமது ஊரவர்களுடன் வெளியீடு செய்து அந்த வெளியீட்டினூடாக மக்களுக்கு ஒரு உந்துதலைக் கொடுக்கலாம்;

  உறவுகளின் கருத்து என்ன?

 • புத்தகத்தை வெளிநாட்டில் உள்ள வாசகர்கள் பெறுவதற்கான வழிவகைகளை செய்வேன். மேலும் எனது கவிதைகளை வாசிக்க http://puthiyakaalaikkathir.blogspot.com இலும் http://vaarppu.com/ இலும் http://eluthu.com/ இலும் உலவிப் பார்க்கமுடியும். நன்றி.

 • vinothiny pathmanathan:

  உங்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகளின் புகைப்படங்களைப் பார்த்தேன்,பாராட்டுக்கள். உங்கள் நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகளை நாங்களும் படித்து சுவைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்