உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட பிக்கப் வாகனத்திற்கு இனம் தெரியாத குழுவினர் தீயிட்டுள்ளனர்.

இதனையடுத்து பிக்கப் வாகனம் சிறிய சேதமடைந்துள்ளதாக பிரதேச சபை தவிசாளர் சி.குணரெத்தினம் தெரிவித்தார்.

மத்தியமுகாம் 11ம் கொலனியில் உள்ள தவிசாளரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட பிக்கப் வாகனத்தை சம்பவதினமான நேற்று (18) நள்ளிரவு 1.30 மணிக்கு இனற்தெரியாத நபர்கள் தீயிட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை மத்தியமுகாம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக பிரதேச சபை தவிசாளர் சி.குணரெத்தினம் தெரிவிக்கையில்,

பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தினால் கல்முனை மற்றும் பிரதேசங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

எனவே படகுச்சேவை தொடர்பாக அவசரக் கூட்டம் நேற்று (18) செவ்வாய்க்கிழமை பிற்பகல் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்திற்கு நான் செல்லவேண்டிய நிலையில் வாகன சாரதி லீவு காரணமாக நான் பிக்கப் வாகனத்தை சபை வாகனபுத்தகத்தில் பதிந்துவிட்டு எடுத்துச்சென்றேன்.

கூட்டம் இரவு 8.45 மணிக்கு முடிவடைந்துள்ள நிலையில் வானத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று வீட்டின் முன் நிறுத்திவிட்டு வாகனத்தை பாதுகாக்க மாமனாரை அமர்த்திவிட்டு நித்திரைக்குச் சென்றேன்.

இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணியளவில் நாசகார குழு ஒன்று வாகனத்தை சுற்றி பெற்றோல் ஊற்றி தீயிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இந்த நிலையில் வாகனம் தீப்பற்றி எரிவதைக்கண்ட மாமனார் சத்தம் போட்டதையிட்டு நான் எழுந்து அயலவர்களின் உதவியுடன் தீயை அனைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தேன்.

இவ் பிரதேச சபைக்கு தவிசாளராக என்னை நியமித்ததை தாங்கமுடியாமல் எனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த சபை உறுப்பினர் ஒருவரின் குழுவினரே இந்த நாசகார வேலையை செய்துள்ளனர் என பிரதேச சபை தவிசாளர் சி.குணரெத்தினம் தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்