உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்வவுனியா, கனகராயன் குளத்திலிருந்து 215 மீற்றர் தொலைவில் உள்ள வீதியோர சேதனைச்சாவடியுடன் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தின் போது இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ள அதேவேளை மற்றுமொரு சிப்பாய் படுகாயமடைந்துள்ளார்.

இன்று 24 அதிகாலை 4.15 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

லொறியின் சாரதி நித்திரை மயக்கத்தில் வாகனத்தை செலுத்தியமையே விபத்திற்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஓடு ஏற்றிச் சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்