உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீனவரின் தடித் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த 24 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் யாழ். போதனா வைத்தியசாலையின் 24ம் வாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். குருநகர் பொலிஸ் சோதனைச்சாவடிக்கு அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் குடிபோதையில் இரு குழு மோதலில் ஈடுபட்டுள்ளது.

இதன்போது மோதலை தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் தடியால் தலையில் தாக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய மீனவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்