உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கிளிநொச்சி, கரடிபோக்கு சந்தியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து – டிப்பர் விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7 பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியிலிருந்து பூநகரி நோக்கி பயணித்து கொண்டிருந்த பேருந்தும், பரந்தனிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்து கொண்டிருந்த டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றதாக கிளிநெச்சிப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்தில் பூநகரியைச் சேர்ந்த பயணிகள் 7 பேர் காயமடைந்துள்ளனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்