தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


ஜெர்மனியில், மதமாற்றத்திற்கு மறுத்த இந்திய மாணவரை தீவிரவாதிகள் கடுமையாகத் தாக்கி அவரது நாக்கை அறுத்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மேற்கு ஜெர்மனியின் பான் நகரில் இந்திய மாணவர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை மாலையில் தெருவில் நடந்து சென்றபோது, 2 ஆசாமிகள் அவரை இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தியுள்ளனர். அந்த மாணவர் மறுத்ததால் அவரை தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் அவர்கள், மாணவரை கடுமையாகத் தாக்கியதுடன், அவரது நாக்கை கத்தியால் அறுத்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மாணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜெர்மனி அரசு சட்டப்படி அந்த மாணவரின் பெயரை போலீசார் வெளியிடவில்லை.

மாணவரை மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தி தாக்கியவர்கள் தீவிரவாதிகள் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுபற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்