உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


மதுபோதையில் மின் கம்பத்துடன் மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் யாழில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மூளாய் மேற்கைச்சேர்ந்தசேர்ந்த தம்பிராஜா வைகுந்தகுமார் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திக்கொண்டு சென்றபோதே வேகக்கட்டுப்பாட்டை இழந்து குறித்த நபர் மின்கம்பத்துடன் நேற்று இரவு 9 மணியளவில் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடொன்றிலிருந்து அண்மையில் நாடு திரும்பிய குறித்த நபருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்