உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



இலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்துள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்யும் வகையில் நாடாளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கி அதனை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தது.

இந்த அங்கீகார ஆவணத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று காலை கையெழுத்திட்டார்.

இதனையடுத்து அது தொடர்பான அறிவித்தல் சிராணி பண்டாரநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பிரதம நீதியரசரான தம்மை பதவி விலக்கிய ஜனாதிபதியின் அறிவிப்பு சிராணி பண்டாரநாயக்கவுக்கு கிடைத்துள்ளதாக அவரின் சட்ட ஆலோசகர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்