Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



BombayJayashri-600x388லைப் ஆப் பை படத்தில் தாலாட்டுப் பாடலொன்றை பாடியதற்காக பிரபல தமிழ்ப் பாடகிகளில் ஒருவரான பாம்பே ஜெயஸ்ரீயின் பெயர் ஒஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழ் இசையுலகில் ஏற்கனவே ஒஸ்கர் விருதினை வாங்கிக் குவித்த ஏஆர் ரஹ்மான் பாம்பே ஜெயஸ்ரீக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24-ம் தேதி 85-வது அகாடமி விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்தியாவின் பாண்டிச்சேரியை மையமாக வைத்து பிரபல இயக்குநர் ஆங்-லீ இயக்கியுள்ள ‘லைப்-ஆப்-பை’ திரைப்படம் 11 பிரிவுகளில் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கனடாவைச் சேர்ந்த மைக்கேல் தன்னாவின் இசையில், தாலாட்டுப் பாடலைப் பாடிய பாம்பே ஜெயஸ்ரீயின் தமிழ் பாடலும் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட பிரிவுகளில் ஒன்று. இந்தப் பாடலை பாடியவர் மட்டுமன்றி எழுதியவரும் ஜெயஸ்ரீதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் எழுதிய பாடல் ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய பாம்பே ஜெயஸ்ரீ,

பாடல் எழுதுவது எளிதான ஒன்றுதான். ஒவ்வொரு தாயும் தனது குழந்தையை கட்டி தழுவும் போது அத்தாயின் உதடுகள் உச்சரிக்கும் வார்த்தைகளையே அந்த பாடலில் எழுதியுள்ளேன்,” என்றார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்