உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்bamban_ship_crash_001இராமேஸ்வரம் பாம்பன் தூக்குப் பாலத்தின் மீது இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்று மோதியதில் பாலத்தின் தூண் சேதமடைந்தது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான எண்ணெய் கப்பல், மும்பைக்கு செல்லும் வழியில் இராமேஸ்வரம் வந்தது.

கடந்த 9ம் திகதி, பாம்பன் பாலம் அருகே எதிர்பாராத விதமாக கப்பல் தரை தட்டியதையடுத்து, அதை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், கடலில் அதிக நீரோட்டம் காரணமாக கப்பலின் நங்கூரம் பிடி தளர்ந்ததால், அந்த கப்பல் நகர்ந்து பாலத்தின் மீது மோதியது.

இதனால் 24வது எண் பாலம் சேதமடைந்ததையடுத்து, இராமேஸ்வரம் செல்லும் இரயில்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, இரயில்வேத் துறை, கடலோர காவற்படை மற்றும் துறைமுக அதிகாரிகள் பாம்பன் பகுதிக்கு சென்று சம்பவ இடத்தில் ஆராய்ந்து வருகின்றனர்.

கப்பல் மோதியதில் அந்த தூண் 60 டிகிரி கோணத்தில் திரும்பியுள்ளதனால், அது சரி செய்யப்படும் வரை மண்டபம் வரை மட்டுமே இரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கப்பல் மீட்கப்பட்ட பின்னரே பாலத்தின் சேதம் குறித்து முழுமையாக ஆய்வு செய்து சீரமைப்பு செய்யப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் மீனவர்கள் உதவியுடன் பாலத்தின் மோதிய படகை மீட்புக்குழுவினர் மீட்டனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்