உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் புதுபடத்துக்கு ‘தலைவா’ என பெயரிடப்பட்டுள்ளது. எனவே இது அரசியல் படமாக இருக்கும் என்று பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஏற்கனவே ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக விஜய் மாற்றி உள்ளார். அதற்கு கொடியும் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த இயக்கம் மூலமாக சமூக சேவை பணிகளும் நடந்து வருகின்றன. விஜய்யும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பொதுக் கூட்டங்களில் பங்கேற்று ஏழைகளுக்கு உதவிகள் வழங்கினார்.

இதையடுத்து விரைவில் அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. விஜய்யும் சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்து இருந்தார். இந்த நிலையில் ‘தலைவா’ என்ற பெயரை தனது புது படத்துக்கு வைத்துள்ளதால் அரசியல் பிரவேசம் சீக்கிரத்தில் இருக்கும் என பேச்சு பரவியுள்ளது.

‘தலைவா’ படத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருப்பதாகவும் விஜய் அரசியல்வாதி வேடத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாயின. இதுகுறித்து விஜயிடம் கேட்ட போது, ‘தலைவா’ படத்தில் அரசியல் விஷயங்கள் இல்லை. நான் இப்படத்தில் அரசியல்வாதியாக நடிக்கவில்லை என்றார். கதை பற்றி எதுவும் சொல்ல முடியாது என்றும் கூறினார்.

படத்தின் தயாரிப்பாளர் சுனில் சந்திர பிரகாஷ் ஜெயின் கூறும் போது, விஜய் இமேஜுக்கு பொருத்தமான தலைப்பாக ‘தலைவா’ பெயர் அமைந்துள்ளது. படத்தின் போஸ்டர்கள் அரசியல் படம் போன்ற எண்ணத்தை பிரதிபலிக்கலாம். ஆனால் படத்தில் அரசியல் இல்லை என்றார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்