உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்வெளிநாட்டைச் சேர்ந்த, திறமை வாய்ந்தவர்களுக்கு சீன அரசு ஐந்தாண்டு கால விசா வழங்க, முடிவு செய்துள்ளது.
சீனாவில் வெளிநாடுகளைச் சேர்ந்த, 5.5 லட்சம் பேர் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தற்போது ஓராண்டு விசா வழங்கப்படுகிறது.

இவற்றை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நடைமுறையை மாற்றி, திறமையானவர்களுக்கு, ஓராண்டு விசாவுக்கு பதிலாக, ஐந்தாண்டு விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, சீனாவின் வெளியுறவு விவகாரத் துறை இயக்குனர் ஜாங்க் ஜியாங்கியோ கூறுகையில், சீனாவில் தற்போது வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும், ஓராண்டு கால விசாவுக்குப் பதிலாக, ஐந்தாண்டு கால விசா வழங்குவது குறித்து, ஐந்து அமைச்சர்களை கொண்ட, குழு ஆய்வு செய்து அனுமதி வழங்கியுள்ளது.

இதை அடுத்து, வெளிநாடுகளைச் சேர்ந்த, திறமையானவர்களுக்கு, சீனாவில் பணியாற்ற, ஐந்தாண்டு கால விசா விரைவில் வழங்கப்படும். தற்போது சீனாவில் உள்ள, 5.5 லட்சம் வெளிநாட்டவர்களில், ஏராளமானவர்கள், விசாவை புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளனர். மேலும், பல்நோக்கு விசா வழங்குவது குறித்தும், அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்