உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்உலகளவில் வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை 20 கோடியாக உயரும் என்று சர்வதேச தொழிலாளர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளாதாவது, 2007ம் ஆண்டில் இருந்து உலகளாவிய வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை 28 மில்லியன் அதிகரித்துள்ளது.

2007ம் ஆண்டில் 189.9 மில்லியனாக இருந்த வேலையற்றோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இறுதியில் 197 மில்லியனாக இருந்தது.

இந்த ஆண்டு மேலும் 5.1 மில்லியன் வேலையற்றோர் உருவாகக்கூடும். ஆண்டு இறுதியில் வேலையற்றோரின் மொத்த எண்ணிக்கை 202 மில்லியனாக இருக்கும்.

2014ல் இந்த எண்ணிக்கை மேலும் 3 மில்லியன் அதிகரிக்கும் என்றும் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட 74 மில்லியன் பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர் எனவும் கூறியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்