உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க உயர்மட்டக்குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் குழுவினர் யாழ். ஆயர், சமூக பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளைச் சந்தித்து யுத்தத்தின் பின்னர் தற்போதைய நிலைமைகளை ஆராய்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் பணியகத்தின் கீழ் பணியாற்றும், பிரதி உதவி இராஜாங்கச் செயலாளர்கள் விக்ரம்சிங், ஜேம்ஸ் மூர், ஜேன் சிம்மர்மன் ஆகியோர் நேற்று இலங்கை வந்தடைந்தனர்.

இதேவேளை, அமெரிக்க உயர்மட்டக் குழுவினர் முதன்முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

அதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன் போது பல்வேறு முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்