உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்28 லட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் நபர் ஒருவர் ஜா எல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்டவரிடமிருந்து 640 கிராம் ஹெரோயின் மற்றும் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் பின்னர், ஹெரோயின் வியாபாரத்திற்கு துணைபோன பிறிதொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் தடுத்து வைத்து சிசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்