Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



5555யாழ்ப்ணத்தில் சப்ததீவு  ஒன்றாக விளங்கும் அலைகடல் மத்தியில் முத்தென விளஙகுவது பசுத்த வேனும் நெடுந்தீவாகும். இத்தீவு யாழ்ப்பாணத்திற்கு தென்மேற்கே 45 கிலோ மீற்றர்தொலைவிலும் குறிக்கட்டுவான் துறைமுகத்திலிருந்து 7 கிலோமீற்றர்தூரத்திலும் தென்இந்தியாவிலுள்ள இராமேஸ்வரத்திலிருந்து 38 கிலோமீற்றர்தூரத்திலுள்ளது. இத்தீவானது சுமார் 48 சதுரகிலோ மீற்றர்பரப்பளவைக் கொண்டது. வெடிஅரசன் தீவுப்பகுதிகளின் மன்னனாக இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு மேற்குப் பகுதியிலுள்ள கோட்டைக்காடு என்னுமிடத்தில் கோட்டை கட்டி இராசதானி அமைத்து படைவீரர்களுடன் ஆட்சி புரிந்தான்.

வெடிஅரசன் கோட்டை இன்றும் சிதைந்த நிலையில் நெடுந் தீவின் வடமேற்கு கரையில் காணப்படுகிறது. ஒல்லாந்தர்ஆட்சிக் காலத்தில் அவர;கள் வியாபரம் நோக்கமாக குதிரைகளை இறக்குமதி செய்து அதிக வருமானம் பெற்றனர;. நெடுந்தீவில் சாறாப் பிட்டி என்ற பகுதியில் குதிரைகள் கட்டிய லாயன்களின் பல தூண்கள் இன்றும் நிமிர;ந்து நிற்பதைக் காணலாம். ஒல்லாந்தர்நாட்டைவிட்டு சென்று பல வருடங்கள் சென்றபின்பும் அவர;கள் விட்டுச் சென்ற குதிரைகளின் வாரிசுகள் இன்றும் தீவின் தெற்கேயுள்ள வெல்லை என அழைக்கப்படும் இடத்தில் சுதந்திரமாக திரியும் காட்சிகளைக் காணலாம். குதிரைகள் ஏற்றப்பட்ட துறைமுகமாகையால் மாவிலி” என்ற பெயர்உண்டானது. ஓல்லாந்தர்தமது தேச இடப்பெயரான னுநடகவ எனப் பெயரிட்டு இத்தீவை அழைத்தனர;. மாவிலித்துறை இன்று நெடுந்தீவு மக்களுக்கும் ஏனைய தீவுகளுக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு கடல் மூலம் பிரயாணஞ் செய்யப்பயன்படும் பிரதான துறைமுகமாக விளங்குகின்றது. நெடுந்தீவின் தென் கிழக்கே உயரிய முக்கோண வடிவமாய் கட்டப்பட்ட வெளிச்சவீடு உள்ளது. இதனை ஒல்லாந்தரே கட்டினர;. இதனை மக்கள் குவிந்தா என அழைப்பர;. இங்கு பத்துக்கு மேற்பட்ட சைவ ஆலயங்களும் 7 கத்தோலிக்க ஆலயங்களும் ஒரு புரொட்டஸ்தாந்து மத ஆலயமும் உள்ளது. 1985ம் ஆண்டு நெடுந்தீவிலிருந்து குறிக்கட்டுவான் துறைமுகத்தை வந்த குமுதினிப் படகினில் பயணம் செய்த குழந்தைகள் வயோதிபர்உட்பட 67 பேர;களை காடையர்கள் வெட்டி இதில் 40 பேர;கள் இறந்தமை வரலாற்றில் சோகநிகழ்வாகும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்