உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்இன்று கொட்டிய பனியில் டென்மார்க் குளிர்கால ஆரம்பத்தின் முதல் மரணம் நிகழ்ந்தது. கிறீன்ஸ்ரட் – கொல்ஸ்ரெல் நகரங்களுக்கிடையே இரண்டு கார்கள் மோதிக் கொண்டதில் 19 வயது இளைஞர் ஒருவர் பரிதாப மரணமடைந்தார். பி.ப.16.40 மணியளவில் சம்பவம் நடைபெற்றது. இவருடைய காருடன் மோதியது இன்னொரு யுவதியின் காராகும். மரணித்த இளைஞரின் குடும்பத்தினர் இதுவரை படிவங்களில் கையெழுத்து வைக்காத காரணத்தால் இளைஞரின் பெயரை போலீசார் இதுவரை வெளியிடவில்லை. கடும்பனியே விபத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. வழிகள் மிகவும் வழுகலாகவே உள்ளன ஆகவே வேகத்தை குறைத்து ஓடுங்கள் என்று போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்