உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இலங்கையின் சண்டே லீடர் ஆங்கில பத்திரிகையின் செய்தியாளர் பாராஸ் சௌகாட்டலி (Faraz Shaukatally) வெள்ளிக்கிழமை நள்ளிரவில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார்.

இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது கழுத்தில் காயமடைந்த நிலையில் அவர் உடனடியாக களுபோவில வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது வீட்டில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவரது கழுத்தில் துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது துப்பாக்கிச் சூடு

சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.

சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவயிலளார் பாரூக் சவுகத்தலி என்பவரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பாரூக்கின் வீட்டுக்குள் பிரவேசித்த மூன்று இனந்தெரியாத நபர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பாரூக், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கழுத்துப் பகுதியில் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், உயிராபத்து எதுவும் கிடையாது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்