Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



சிறிலங்கா அரசு ஊழல் நிறைந்து காணப்படுகிறது. இதன்காரணமாகவே அந்த நாட்டின் முக்கியமான துறைகளின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த தாக்குதல் தொடரும். இவ்வாறு எச்சரித்திருக்கிறார் டவி ஜோன்ஸ் என்று அறியப்படும் நபர்.

சிறிலங்கா அரசு ஊழல்மிக்கது என்பதாலேயே இந்தத் தாக்குதல்களை நடத்துவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்கா அரச இணையத்தளங்கள் மீது டவி ஜோன்ஸ் என்ற பெயருடைய நபர் தொடர்ந்து சைபர் தாக்குதல் நடத்தி முடக்கி வருகிறார்.

இதுவரை 50இற்கும் அதிகமான அரசாங்க இணையதளங்கள் சைபர் தாக்குதலுக்கு இலக்காகி செயலிழந்துள்ளன.

இறுதியாக மாலைதீவுக்கான சிறிலங்கா தூதரகத்தின் இணையத்தளத்தை முடங்கியுள்ள டவி ஜோன், ஊழல் மிக்க அரசாங்கம் என்பதால், சிறிலங்கா அரசாங்கத்தின் இணையத்தளங்கள் மீது தொடர்ந்து சைபர் தாக்குதல்களை நடத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளார்.

இந்த எச்சரிக்கை சிறிலங்கா அரசுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்