உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


Unavngivetஅவித்தமுட்டை கிரேவி

முட்டை-10
கொத்தமல்லி,புதினா, கறிவேப்பிலை- சிறிதளவு
சின்ன வெங்காயம்-20
தக்காளி-3
இஞ்சிபூண்டு விழுது-3 ஸ்பூன்
மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
எண்ணெய்- ஒரு குழிகரண்டி
கடுகு.உளுந்து- சிறிதளவு
உப்பு-தேவைக்கு

முட்டைகளை அவித்து மேல்பகுதியில் கால்பகுதியளவுக்கு மட்டும் கீறிவைக்கவும். இது மசாலா உள்ளே சேர வைக்கும்.

சின்னவெங்காயம் அரைத்துவைக்கவும். இஞ்சிபூண்டு தனியாக அரைத்து வைக்கவும். தக்காளி பொடியாக நறுக்கவும். கொத்தமல்லி புதினா

சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளித்து பின்னர் கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை சேர்க்கவும். அதன் பின் வெங்காய விழுது சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்ததும் இஞ்சிபூண்டுவிழுது சேர்க்கவும்.

பச்சைவாசனை போனதும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.

தக்காளி குழைந்ததும் மிளகாய் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

அவித்த முட்டைகளை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மசாலா சேரும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

விருப்பப்பட்டால் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடலாம். 5 நிமிடங்கள் கழித்து மசாலா ஒரு சேர வந்ததும் இறக்கி பரிமாறவும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்