உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் முஸ்லிம் பிரிவு உருவாக்கப்பட்ட வேண்டும் என ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசரான சி.வே விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

முஸ்லிம் கட்சிகளை தொடர்ந்து நம்பியிருக்காது தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் முஸ்லிம் பிரிவு உருவாக்கப்பட்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் கல்முனை மேயரும் செனட்டருமான மசுர் மௌலானவின் அகவை என்பது நிறைவு விழா கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதில் தலைமையுரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். அதற்கான கொள்கை திட்டங்களை வகுத்து செயற்படுத்த வேண்டும். இதன் மூலம் பெறவேண்டியவற்றை இலகுவாக பெறமுடியும்.

இந்த இரண்டு சிறுபான்மை இனங்களும் இணைந்து செயற்படுவதன் மூலமே இனப்பிரச்சினை தீர்வுக்கு ஒரே வழியாகும். கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைவிட்டது.

நாட்டின் பிரஜை என்ற வகையில் இதற்காக கவலைப்பட்டேன். நாங்கள் மாணவர்களாக இருந்தபோது இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வரவேற்கின்றோம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எனும் பெயரின் மூலம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை இந்த கட்சியில் ஒன்றிணைக்க முடியும். தமிழ்த் தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஒண்றினைந்து செயற்பட நான் ஆவணம் செய்கின்றேன்.

முஸ்லிம்களில் பல்துறை சார்ந்தவர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் அஷ்ரப் எவ்வாறு அன்று எப்படி நுழைத்துக்கொண்டாரோ அப்படி தமிழ்த் தேசிய கூட்டமைப்பினுள் முஸ்லிம்களையும் உள்வாங்க வேண்டும்.

முஸ்லிம்களின் அபிலாஷைகளை தமிழ் தலைவர்கள் உள்வாங்க வேண்டும். அதற்கு ஏற்ப செயற்பட வேண்டும். ஒரே தமிழ், முஸ்லிம் தலைமையின் கீழ் ஒன்றுபட வேண்டும்.

தமிழ் பேசும் மக்களின் உரிமை போராட்டங்களை வலுவாக முன்னெடுக்க வேண்டும். தமிழ் பேசும் மக்கள் போட்டி அரசியல் நடத்துவதற்கான காலம் இதுவல்ல.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளும் இதை கவனத்திற்கொள்ள வேண்டும். சோரம் போகும் தமிழ் தலைமையினை உண்மையுள்ள முஸ்லிம்கள் ஒருபோதும் வரவேற்கமாட்டார்கள்.

ஆனால் நேர்மையான தமிழ் தலைமைத்துவத்தை உண்மையுள்ள முஸ்லிம்கள் எப்போதும் வரவேற்பார்கள்’ என்றார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்