மட்டக்களப்பு செங்கலடிப் பிரதேத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
வந்தாறுமூலை செட்டியார் வீதியைச் சேர்ந்த பி.சிவகுமார் (வயது 36) மற்றும் வாழைச்சேனை விநாயகபுரத்தைச் சேர்ந்த பி.அம்பிகாவதி (வயது 22) ஆகியோரே சம்பவத்தில் காயமடைந்தவர்களாவர்.
காயமடைந்தவர்கள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து,கொம்மாதுறை இராணுவ முகாம் தரிப்பிடத்தில் பயணிகளை இறக்குவதற்காக நிறுத்தப்பட்ட வேளை வந்தாறுமூலைப் பிரதேசத்திலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதுண்டதால் விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர்ப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்