உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மன்னார், காட்டாஸ்பத்திரி கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த 27 வயதுடைய மொஹமட் றிஸ்வான் என்ற மீனவரே உயிரிழந்தவராவார். இன்று காலை இரண்டு படகுகளில் காட்டாஸ்க்த்திரி கிராமத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர்.

பின்னர், கடலில் வலை வீசுவதற்காக நங்கூரமொன்றில் ஒரு படகு கட்டப்பட்ட நிலையில், ஏனைய படகு நங்கூரத்தில் கட்டப்பட்டிருந்த படகுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், படகில் கட்டப்பட்டிருந்த கயிறு களன்ற நிலையில் மேற்படி படகு நீரில் அடித்துச்செல்ல முற்பட்டுள்ளது. இதன்போது, அதில் இருந்த மூன்று மீனவர்களும் கடலில் பாய்ந்து மற்றைய படகில் ஏற முற்பட்டுள்ளனர்.

இதன்போதே ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஏனைய இருவரும் ஆபத்தான நிலையில் காப்பாற்றப்பட்டு பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்