தமிழில் எழுத
பிரிவுகள்


ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரையும் தூக்கிலிடுவது அரசியலமைப்பு ரீதியாக தவறானதாக இருக்கும் என நீதியரசர் கே.டி.தோமஸ் தெரிவித்தார்.

இந்த மரண தண்டனைகளை உறுதி செய்த உயர் நீதிமன்ற குழாமிற்கு தலைமை தாங்கிய இவர், “அந்த குழாமிற்கு தலைமை தாங்கியது எனது துரதிர்ஷ்டம்” என டைம்ஸ் ஒப் இந்தியாவிற்கு கூறியுள்ளார்.

நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வரின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. பின்னர் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

ஒரு நேர்காணிலின்போது நீதியரசர் தோமஸ் மரண தண்டனையை உறுதி செய்தது தவறானது என கூறினார். இதன்போது முன்னுதாரணங்கள், குற்றம் சுமத்தப்பட்டவரின் இயல்பு மற்றும் குணாம்சங்களை கருத்திற்கொண்டு தீர்ப்பு வழங்கப்படாததால் இந்த மரண தண்டனைகள் தவறானவை என அவர் சுட்டிக்காட்டினார்.

இது அரசியலமைப்பின் உறுப்புரை 21ஐ மீறுவதாகும் என்றார். இற்கும் மேலாக ஒருபடி போன இந்த நீதிபதி முன்னுதாரணங்களையும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் குணஇயல்புகளையும் கவனிக்கும்போது இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

இவர்கள் மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் இவர்கள் மூவரும் 22 வருட சிறை அனுபவித்துவிட்டனர். இவர்கள் தூக்கிலிடப்பட்டால் ஒரு குற்றத்திற்காக இரண்டு தண்டனை அனுபவித்தவர்கள் ஆவர். இது அரசியலமைப்பிற்கு முரணானது என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்