Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



இலங்கை விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் விசேட அறிவிப்பொன்றை வழங்கவுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐநா எவ்விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனின் ஊடகப் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசேட கவனத்தை செலுத்தியுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் விரிவாக ஆராயப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் ஐ.நா பொதுச் செயலாளர் விசேட அறிவிப்பொன்றை வழங்குவார் என பான் கீ மூனின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்