உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


inஈழத்தமிழர் ஆதரவு அலை தற்போது சர்வதேச ரீதியாக எழுச்சி கொண்டுள்ள நிலையில், ஈழத்தமிழரின் நலனுக்காக விடிவுக்காக சென்னையில் மாணவர்கள் 8 பேர் காலவரையறையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சென்னையில் குறித்த மாணவர்கள் 8 பேரும் தியாகி திலீபன் காட்டிச் சென்ற வழியில் அஹிம்சைக் களத்தில் குதித்துள்ளனர். சென்னையில் உள்ள தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் நேற்றுமுதல் சென்னை லெயோலா கல்லூரியில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜோபிரிட்டோ, திலீபன், சாஜிபாய் அன்டனி, லியோ, சண்முகப்பிரியன், பிரசாத், அனிஷ், பால் ஆகிய 8 மாணவர்களுமே உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, உண்ணாவிரதமிருக்கும் மாணவர்கள் முன்வைத்துள்ள அதே கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை லெயோலா கல்லூரி மாணவர்கள் சுமார் 500 பேர் நேற்று உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்