உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


imagesCACFIAWOஉரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

நேற்று உரும்பிராய் மருதனார் மடம் வீதியில் சந்திரோதயா பாடசாலைக்கு அருகில் உள்ள பெயர்ப்பலகை மீது வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இந்த சம்பவத்தில் கோண்டாவில் குட்செட் றோட்டைச் சேர்ந்த சின்னத்தம்பி ரம்சன் வயது-23 என்ற இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.

இவருடன் சென்ற அவரது நண்பரான கோண்டாவில் குட்செட் றோட்டைச் சேர்ந்த பஞ்சலிங்கம் செல்வக்குமார் வயது-28 என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியதாகவும் படுகாயமடைந்தவர் பின்பகுதியில் அமர்ந்திருந்ததாகவும், தெரியவந்துள்ளது.

இவர்கள் தலைக் கவசம் அணியாத நிலையில் சென்று விபத்திற்குள்ளானதால் இவர்களின் தலைப் பகுதியே சிதைவடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்