உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்றை கொண்டுவந்த அமெரிக்காவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

அத்துடன், மேற்படி தீர்மானத்தை ஆதரிக்குமாறு இந்திய மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்த கலைஞர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் த.தே.கூ தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்