உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்திருமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் உள்ள பெரியகுளத்தில் படகொன்று கவிழ்ந்து இருவர் காணாமல் போயுள்ளனர்.

குறித்த படகில் ஐவர் பயணித்ததாகவும் அதில் மூவர் உயிர் தப்பியதாகவும் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் திருகோணமலை – அன்புவெளிபுரம் – உப்புவெளியைச் சேர்ந்த 31 வயதுடைய வன்னியசிங்கம் திவதரன் மற்றும் உப்புவெளி – பாலயூத்து பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கோல்டன் ஜயந்த் ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்