உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்imagesவாகன சாரதி அனுமதிப்பத்திரமின்றி மது போதையில் வாகனத்தை செலுத்திய தேரருக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் மேலதிக நீதவான் எதிரிமான என்பவரே இவ்வாறு நேற்று புதன்கிழமை தண்டனை விதித்துள்ளதுடன் 7500 ரூபா தண்டமும் விதித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு டிசெம்பர் 30 ஆம் திகதி குறித்த தேரர் மதுபோதையில் வாகனத்தை செலுத்திய போது பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். குறித்;த தேரர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்தே அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றத்தை ஏற்றுக்கொண்டாலும் அவருடைய தராதத்தை பார்க்கவில்லை என்றும் காவியுடையை கவனத்தில் கொண்டே ஆறு மாதகால சிறை தண்டனையை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைத்ததாக எச்சரித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்