Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



Unavngivetமும்பையில் புதிதாக கட்டி வரப்பட்ட 7 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 30 பேர் பலியாயினர். 40 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இன்னும் பலர் உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. பல தொழிலாளர்கள் இன்னும் மீட்கப்படாமல் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கின்றனர்.
மும்பை தானே ஷில்பாத்தா பகுதியில் 4 மாடி கட்டடம் கொண்ட இந்த பகுதியில் மேலும் கூடுதலாக 3 மாடிகள் கட்டும் பணி துவங்கி நடந்து வந்தது. இந்நிலையில பாரம் தாங்காமல் இந்த கட்டடம் இடிந்து விழுந்தது. ஏற்கனவே இந்த 4 மாடியில் 30 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர்.

திடீரென கட்டடம் இடிந்து விழுந்ததும், வீட்டில் இருந்தவர்கள் பலரும் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். 40 க்கும் மேற்பட்டார் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விதி முறைக்கு எதிராக : இந்த கட்டடம் அனுமதி பெறாமல் விதி முறைக்கு எதிராக கட்டப்பட்டு வந்ததாக தற்போது தான் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கட்டட உரிமையாளர்கள் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இடிபாடுகளில் பலரும் சிக்கியிருப்பதால் இவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்