உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இந்திய மீனவர்கள் யாரையும் தாங்கள் கைது செய்யவில்லை என்று இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 9 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

எனினும் இதனை மறுத்துள்ள கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய, இலங்கை கடற்படையினர் எந்த ஒரு இந்திய மீனவர்களையும் கைது செய்யவில்லை என்று தெரிவித்தார்.

எனினும் இந்த மாதத்தின் ஆரம்பத்திலேயே இலங்கை கடற்படையினரால் 56 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்தும் தாம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் கைது செய்யப்படுவதாகவும் தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் ஒவ்வொரு தடவையும் இலங்கைக் கடற்படை அதற்கு மறுப்புத் தெரிவித்து வருகின்றது.

எனினும் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட மீனவர்களில் 19 பேர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்