உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


imagesCACFIAWOரயிலுடன் பஸ் மோதி விபத்துக்குள்ளாதில் பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருவளை ரொக்லண்ட் சந்தியிலேயே இந்த விபத்து சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. இதில் ஆகக்குறைந்தது 30 பேர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மரண வீடொன்று கண்டியிலிருந்து வந்த பஸ்ஸொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும் விபத்து இடம்பெற்ற இடத்தில் மூன்று சடலங்கள் கிடப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து காலியையே நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயிலுடன் மோதியே பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான பஸ் காலி கொழும்பு பிரதான வீதியில் விழுந்தமையினால் அந்த வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்