உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இளைய தளபதி விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் அஜீத் குமாரை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

அஜீத் குமாரும், விஜய்யும் சிறிது காலம் சண்டை போட்டுக் கொண்டதாக கோடம்பாக்க தகவல் வட்டாரங்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன.

இதனால் அவர்களின் ரசிகர்களும் அதே பாணியில் சண்டை போட்டு வந்தனர்.

இந்நிலையில் பக்குவமடைந்த அஜீத்தும், விஜய்யும் தற்போது நண்பர்களாகிவிட்டனர். அண்மையில் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறுகையில், ராஜாவின் பார்வையிலே விஜய்யும், அஜீத்தும் சேர்ந்து நடித்த படம் ராஜாவின் பார்வையிலே. அப்படத்தில் நடிக்கையில் இருவரும் வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்தனர். அப்படத்தின் ஷூட்டிங்கின்போது ஷோபா தினமும் விஜய்க்கு மட்டுமின்றி அஜீத்துக்கும் சேர்த்து சமைத்து உணவு அனுப்பியுள்ளார்.

நன்றி மறக்காத ‘தல’ விஜய் அம்மா தனக்கும் சேர்த்து சாப்பாடு அனுப்பி வைத்ததை அஜீத் குமார் இன்றும் மறக்கவில்லை. எப்பொழுதெல்லாம் ஷோபாவை பார்க்கிறாரோ அப்போதெல்லாம் அஜீத் தனது நன்றியைத் தெரிவிப்பார். அஜீத் குமாரை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று ஷோபா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்